மராட்டியத்தில் வரும் அக்டோபர் 22 முதல் அனைத்து திரையரங்குகளும் மீண்டும் திறப்பு


மராட்டியத்தில் வரும் அக்டோபர் 22 முதல் அனைத்து திரையரங்குகளும் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 25 Sep 2021 10:29 AM GMT (Updated: 25 Sep 2021 10:29 AM GMT)

மராட்டியத்தில் வரும் அக்டோபர் 22ந்தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் மீண்டும் திறக்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன.  இதேபோன்று உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளன.  இந்த நிலையில், தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

மராட்டியத்தின் மும்பை நகரில் பள்ளிகள் திறப்பு பற்றி தீபாவளிக்கு பின் முடிவு செய்யப்படும் என மேயர் கிஷோரி பட்னாகர் கூறியுள்ளார்.  இந்த நிலையில், மராட்டியத்தில் முதல்-மந்திரி அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், வரும் அக்டோபர் 7ந்தேதி முதல் (நவராத்திரியின் முதல் நாள்) அனைத்து கோவில்களும் மீண்டும் திறக்கப்படும் என அறிவித்தது.

இதேபோன்று மராட்டியத்தில் அனைத்து மதவழிபாட்டு தலங்களும் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த சூழலில், 
மராட்டியத்தில் வரும் அக்டோபர் 22ந்தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் மீண்டும் திறக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் செயலகம் தெரிவித்து உள்ளது.


Next Story