தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் அரசு பயிற்சி மைய மாற்று திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை + "||" + Sexual abuse of a disabled girl at a government training center in Chhattisgarh

சத்தீஷ்காரில் அரசு பயிற்சி மைய மாற்று திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சத்தீஷ்காரில் அரசு பயிற்சி மைய மாற்று திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
சத்தீஷ்காரில் அரசு பயிற்சி மைய மாற்று திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், 5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜாஷ்பூர்,

சத்தீஷ்காரின் ஜாஷ்பூரில் மாற்று திறனாளிகளுக்கான அரசு உதவி பெறும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த நிலையில், போலீசாருக்கு புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி நடந்த விசாரணையில், அரசு பயிற்சி மைய மாற்று திறனாளி சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுதவிர, சிறுமியுடன் இருந்த 5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.  இதுபற்றி மையத்தின் சூப்பிரெண்டுக்கு தகவல் தெரிந்து அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.  இதன் தொடர்ச்சியாக, காப்பக அதிகாரி மற்றும் அந்த காப்பகத்தின் காவலர் என 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி விசாரணை நடத்தும்படி மாவட்ட கலெக்டர் மகாதேவ் காவ்ரே, போலீஸ் சூப்பிரெண்டிடம் கேட்டு கொண்டுள்ளார்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சா வழக்கில் தேடப்பட்ட 6 பேர் கைது
கஞ்சா வழக்கில் தேடப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராகிம் கைது
மதுரை கோரிப்பாளையம் தர்காவுக்கு செல்ல முயன்ற பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராகிம் கைது செய்யப்பட்டார்.
3. வீட்டில் பட்டாசு தயாரித்த 8 பேர் கைது
வெம்பக்கோட்டை பகுதியில் வீட்டில் பட்டாசு தயாரித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
5. பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 2 பேர் கைது
அலங்காநல்லூர் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.