முழு அடைப்பு போராட்டம்: பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்


முழு அடைப்பு போராட்டம்: பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்
x
தினத்தந்தி 26 Sep 2021 7:56 PM GMT (Updated: 26 Sep 2021 7:56 PM GMT)

முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் முன் எச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயி சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்புக்கு கர்நாடகத்திலும் விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் முன் எச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகரில் முக்கியமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், முழு அடைப்பின் போது சிறிய அளவிலான அசம்பாவிதங்கள் கூட நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து துணை போலீஸ் கமிஷனர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முழு அடைப்பையை யொட்டி 2 கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், 2 இணை போலீஸ் கமிஷனர்கள், 11 துணை போலீஸ் கமிஷனர்கள், 45 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை, 21 பிளட்டூன் நகர ஆயுதப்படை போலீசார் உள்பட 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார். மேலும் முழு அடைப்பை காரணம் காட்டி பெங்களூருவில் பலவந்தமாக கடைகளை அடைக்க வலியுறுத்துவது, பொது போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story