தேசிய செய்திகள்

காங்கிரசில் இணையும் கன்னையா குமார் - ஜிக்னேஷ் மேவானி + "||" + Kanhaiya Kumar's Itinerary Ahead of Joining Congress Today Will Involve Invoking a Freedom Fighter

காங்கிரசில் இணையும் கன்னையா குமார் - ஜிக்னேஷ் மேவானி

காங்கிரசில் இணையும் கன்னையா குமார் - ஜிக்னேஷ் மேவானி
பீகார் அரசியலில் கன்னையா குமார் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி

2025 பீகார் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதற்கு முதல் கட்ட நடவடிக்கையாக  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரும்  இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் இளம் தலைவருமான  கன்னையா குமாரை காங்கிரசில் இணைத்து கொள்ள உள்ளது.  இதற்காக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் அவரை வரவேற்கும் வகையில்  பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

கன்னையா குமார் தனது  பயணத்தை பகத் சிங் பூங்காவில் உள்ள பகத் சிங்கின் சிலைக்கு மாலை அணிவித்து தொடங்குவார். இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்தில் அவர் முறையாக இணைகிறார். மாலை 3.30 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

பீகார் அரசியலில் கன்னையா குமார் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கன்னையா குமாருடன், குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானியும்,காங்கிரசில் இணைகிறார்.

கடந்த காலங்களில் ஜோதிராதித்யா சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா மற்றும் பிரியங்கா சதுர்வேதி போன்ற பல இளம் தலைவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிட தக்கது.

கடந்த பீகார் சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்
பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய டுவீட்டை கட்சியின் சமூக ஊடக குழு நீக்கியதாக டி.கே.சிவகுமார் பின்னர் அறிவித்தார்
2. உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
3. சாதி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடவில்லை - டி.கே.சிவக்குமார் பேட்டி
சாதி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடவில்லை என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
4. முழு நேர காங்கிரஸ் தலைவராக இருக்க தயார்... ஆனால்...! - சோனியாகாந்தி பேச்சு
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதற்கு அடையாளம் தான் பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு என சோனியாகாந்தி கூறினார்.
5. வெல்டிங் பற்றவைப்பு பெட்டி வெடித்து நான்கு ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம்
மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் ஒருவர் - ஒரு தலைமை காவலர் - ராய்பூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.