மேற்கு வங்காளத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்


மேற்கு வங்காளத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்
x
தினத்தந்தி 29 Sep 2021 8:58 PM GMT (Updated: 29 Sep 2021 8:58 PM GMT)

மேற்கு வங்காளத்தில் பவானிப்பூர், ஜாங்கிப்பூர், சம்ஷேர்கஞ்ச் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் பவானிப்பூர், ஜாங்கிப்பூர், சம்ஷேர்கஞ்ச் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பவானிப்பூரில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பிரியங்கா திப்ரேவாலும, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சிரிஜிப் பிஸ்வாசும் களமிறங்கியுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைய வாக்குப்பதிவுக்காக பவானிப்பூரில் வரலாறு காணாத பாதுகாப்ப போடப்பட்டு உள்ளது. குறிப்பாக 15 கம்பெனி துணை ராணுவம் தொகுதி முழுவதும் களமிறக்கப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 287 வாக்குச்சாவடி மையங்களிலும் 200 மீ. சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தொகுதி முழுவதும் 38 இடங்களில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதைப்போல மழை பெய்தால் வாக்குப்பதிவு இடையூறு இன்றி நடைபெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Next Story