நாளை முதல் இந்தியா-இலங்கை இணைந்து மெகா ராணுவ பயிற்சி


நாளை முதல் இந்தியா-இலங்கை இணைந்து மெகா ராணுவ பயிற்சி
x
தினத்தந்தி 3 Oct 2021 4:54 AM GMT (Updated: 3 Oct 2021 4:54 AM GMT)

நாளை முதல் இந்தியா-இலங்கை இணைந்து மெகா ராணுவ பயிற்சி நடக்கிறது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் இலங்கை ராணுவங்கள் இணைந்து மித்ரா சக்தி என்ற பெயரில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் 8-வது கட்ட மெகா ராணுவ பயிற்சி இலங்கையின் அம்பாராவில் நாளை (திங்கட்கிழமை) முதல் 15-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

இரு ராணுவங்களின் நெருக்கமான உறவுகளை வலுப்படுத்தவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த பயிற்சி நடைபெறுவதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு ராணுவத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும் இந்த பயிற்சி உதவும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் மிகப்பெரிய படையுடன் இணைந்து, இந்திய ராணுவத்தின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த 120 வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான 7-வது கட்ட பயிற்சி புனேயில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story