கடுமையான விமான போக்குவரத்து நெரிசலை எதிர்நோக்கியுள்ள கொச்சி விமான நிலையம்..!


கடுமையான விமான போக்குவரத்து நெரிசலை எதிர்நோக்கியுள்ள கொச்சி விமான நிலையம்..!
x

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அக்டோபர் மாதத்தில் அதிக அளவில் விமான போகுவரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொச்சி,

கொச்சி சர்வதேச விமான நிலையம் இந்தியாவில் சர்வதேச விமான நெரிசலை எதிர்கொள்ளும்  விமான நிலையங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஜூலை மாதம் தொடங்கி கடந்த மூன்று மாதங்களில் அதிகளவில் சர்வதேச விமான நெரிசலை எதிர்கொள்ளும்  விமான நிலையமாக கொச்சி மாறியுள்ளது. 

அக்டோபர் மாதத்தில் இந்த விமான நிலையத்தில்  வெளிநாட்டு விமான போக்குவரத்து அதிக எண்ணிக்கையில்  இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கொச்சி விமான நிலையத்தில் இருந்து விமான போக்குவரத்தை தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதத்தில், ஒரு நாளில் மட்டும் 58 சர்வதேச விமான வருகை மற்றும் புறப்பாடு நடக்கிறது. 

‘செப்டம்பர் மாதத்தில் அதிக அளவில் விமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அக்டோபர் மாதத்தில் இன்னும் அதிக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கொச்சின் சர்வதேச விமான நிலைய இயக்குநர் எஸ் சுஹாஸ் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.  

கொச்சின் விமான நிலையத்தை செப்டம்பர் மாதம் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 900 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.இந்த எண்ணிக்கை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களை விட அதிகம். இங்கு பயணிகளுக்கு தேவையான வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளில் சராசரியாக 106  விமான சேவைகள்(உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் உட்பட)  நடைபெறுகின்றன. அதை போல, ஒரு நாளில் சராசரியாக 14,500 பயணிகள்  இங்கு விமான சேவையை பயன்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள், லண்டன், மாலே மற்றும் கொழும்பு ஆகிய இடங்களுக்கு கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து  விமான சேவைகள் உள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story