தேசிய செய்திகள்

மேற்கு வங்காள சட்டசபை இடைத்தேர்தல்; இடதுசாரி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு + "||" + West Bengal Assembly byelection; Announcement of Left Party Candidates

மேற்கு வங்காள சட்டசபை இடைத்தேர்தல்; இடதுசாரி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

மேற்கு வங்காள சட்டசபை இடைத்தேர்தல்; இடதுசாரி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை இடதுசாரி கட்சி அறிவித்து உள்ளது.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30ந்தேதி நடைபெற உள்ளது.  இதற்கான வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்து உள்ளது.

அதன்படி, தின்ஹடா தொகுதியில் உதயன் குஹா, சாந்திப்பூர் தொகுதியில் பிராஜ் கிஷோர் கோஸ்வாமி, கர்தஹா தொகுதியில் சோபன்தேவ் சட்டோபாத்யாய் மற்றும் கொசாபா தொகுதியில் சுப்ரதா மொண்டல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், 4 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இடது சாரி கட்சி இன்று அறிவித்து உள்ளது.  இதன்படி, தின்ஹடா தொகுதியில் அப்துர் ராப், சாந்திப்பூர் தொகுதியில் சவுமென் மகதோ, கர்தஹா தொகுதியில் தேபஜோதி தாஸ் மற்றும் கொசாபா தொகுதியில் அனில் சந்திர மண்டல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை, கிறிஸ்துமஸ் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சபரிமலை, கிறிஸ்துமஸ் நெரிசலை தவிர்க்க மூன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
2. புதுச்சேரி மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வெள்ள நிவாரணம்...!
புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
3. மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியீடு
தமிழக அரசு மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
4. தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
5. கெஜ்ரிவாலின் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம்: பஞ்சாப் மந்திரி
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் 300 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம் என பஞ்சாப் மந்திரி கூறியுள்ளார்.