நான் எந்த ஒரு அமைப்பு குறித்தும் பேசவில்லை: குமாரசாமி விளக்கம்


நான் எந்த ஒரு அமைப்பு குறித்தும் பேசவில்லை: குமாரசாமி விளக்கம்
x
தினத்தந்தி 6 Oct 2021 6:22 AM GMT (Updated: 6 Oct 2021 6:22 AM GMT)

நாட்டில் அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என குமாரசாமி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு,

ஜனாத தளம் கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி  பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டில் அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஆட்சி பணியில் அந்த அமைப்பை சேர்ந்த 4,000 பேர் சேர்ந்துள்ளனர். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 626 பேர் இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெற்றனர். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது” எனக்கூறினார்.  குமாரசாமியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.  

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சேர்ந்துள்ளதாக கூறியது குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ள குமாரசாமி கூறியதாவது:-

நான் எந்த கட்சி குறித்தோ அல்லது அமைப்புகள் குறித்தோ தவறாக பேசவில்லை. கொரோனா ஊரடங்கு நேரத்தில் நான் பல்வேறு புத்தகங்களை படித்தேன். வரலாற்று அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தேன். அந்த புத்தகங்களில் கூறியுள்ள சில தகவல்களை தான் நான் கூறினேன்”என்றார். 


Next Story