பாம்பை ஏவி மாமியார் கொலை; மருமகள்- காதலனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் மறுப்பு


பாம்பை ஏவி மாமியார் கொலை; மருமகள்- காதலனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் மறுப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 6:41 AM GMT (Updated: 2021-10-07T12:11:39+05:30)

ராஜஸ்தானில் பாம்புக் கடியால் உயிரிழப்பது இயல்பான ஒன்று, ஆண்டுதோறும் ஏராளமானோர் பாம்புக் கடியால் உயிரிழக்கிறார்கள்

புதுடெல்லி

ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்டத்தில் அல்பனா, சச்சின் தம்பதி. இதில் சச்சின் ராணுவ வீரர் என்பதால், மனைவியை தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு ராணுவப் பணிக்குச் சென்றுவிட்டார். திருமணம் ஆனபின்பும், அல்பனா தனது முன்னாள் காதலரும் ஜெய்ப்பூரில் வசிக்கும் மணிஷுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.

இது குறித்து அறிந்த  மாமியார் சுபோத் தேவி அல்பனாவைக் கண்டித்துள்ளார். வீட்டில் இருக்கும் மாமனார் ராஜேசும் அடிக்கடி வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றதால், மாமியாருக்கும், மருமகளுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் தனது முன்னாள் காதலன் ராஜேஷ், அவரின் நண்பர் கிருஷ்ண குமார் ஆகியோருடன் பேசி, தனது மாமியாரைக் கொல்ல அல்பனா திட்டமிட்டு உள்ளார். இதற்காக மாமியார் தூங்கும்போது அவரின் படுக்கை அருகே கொடிய விஷம் கொண்ட பாம்பை ஒரு பையில் வைத்து அதை கடிக்கவைத்து கொல்ல முடிவு செய்தனர்.

அவர்கள் திட்டமிட்டபடை கடந்த 2018ம் ஆண்டு, ஜூன் 2-ம்தேதி பாம்பு கடியால் மாமியார் சுபோத் தேவி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு சுபோத் தேவி கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுபோத் தேவி இறப்பில் சந்தேகமடைந்த போலீசார், அல்பனா செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அப்போது, சுபோத் தேவி இறப்பதற்கு முதல்நாள் இரவு ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் சென்றது கண்டு சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் அல்பனா, அவரின் முன்னாள் காதலர் மணிஷ், அவரின் நண்பர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் விஷபாம்பைப் பயன்படுத்தி மாமியாரைக் கொல்ல மருமகளும் அவருடன் சேர்ந்த 2 பேரும் சதி செய்தது தெரியவந்தது.

ராஜஸ்தானில் பாம்புக் கடியால் உயிரிழப்பது இயல்பான ஒன்று, ஆண்டுதோறும் ஏராளமானோர் பாம்புக் கடியால் உயிரிழக்கிறார்கள் என்பதால், சுபோத் தேவி இறப்பையும் அவ்வாறு கருதுவார்கள் என்று அல்பனா நினைத்துள்ளார். ஆனால், போலீசார் விசாரணையில் உண்மை வெளியானது.

இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில இருக்கும் குற்றவாளிகள் மூவரும் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது.

இந்தவழக்கில் மூவரும் புதிய முறையில் பாம்பைப் பயன்படுத்தி ஒருநபரைக் கொலை செய்துள்ளீர்கள். பாம்பாட்டியிடம் இருந்து பாம்பை வாங்கித் தருவதற்கு மனுதாரர் உதவியுள்ளார். ஆதலால் ஜாமீன் வழங்கிட முடியாது' எனத் தள்ளுபடி செய்தனர்.

Next Story