தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு அலுவலகத்திற்குள் அனுமதி இல்லை திடீர் அறிவிப்பு


தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு அலுவலகத்திற்குள் அனுமதி இல்லை திடீர் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2021 10:50 AM GMT (Updated: 8 Oct 2021 10:50 AM GMT)

தடுப்பூசி போடாத டெல்லி அரசு ஊழியர்கள் அக்டோபர் 16 முதல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.


புதுடெல்லி,

 டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது அரசு ஊழியர்களுக்கு இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில்,  தடுப்பூசி போடாத டெல்லி அரசு ஊழியர்கள் அக்டோபர் 16 முதல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது. 

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத டெல்லி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் உட்பட, அனைவரும் அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வரை விடுப்பில் இருப்பதாகவே கருதப்படுவார்கள்.

அக்டோபர் 15 -க்குள்  குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாத ஊழியர்கள் அக்டோபர் 16 முதல்  அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வரை அந்தந்த அலுவலகங்கள், சுகாதார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்கள் தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களை ஆரோக்கிய சேது செயலி அல்லது தடுப்பூசி சான்றிதழ் மூலம் சரிபார்ப்பார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story