6 மாதத்துக்கு முன்பாக நடத்துகிற தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை; தேர்தல் கமிஷனுக்கு மாயாவதி கோரிக்கை


6 மாதத்துக்கு முன்பாக நடத்துகிற தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை; தேர்தல் கமிஷனுக்கு மாயாவதி கோரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2021 6:48 PM GMT (Updated: 9 Oct 2021 6:48 PM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில், கன்ஷிராம் நினைவிடத்தில் அவரது 15-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர், இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கூடினர். அவர்கள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி பேசும்போது, “ தேர்தல் கமிஷன், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பாக கருத்துக்கணிப்புகள் கூடாது. 6 மாதங்களுக்கு முன்பாக கருத்துக்கணிப்புகள் நடத்தி முடிவுகளை வெளியிடுவது, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என கூறினார்.

5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி ஏ.பி.பி சி- வோட்டர் அமைப்பு, கடந்த மாதம் கருத்துக்கணிப்புகள் நடத்தி தற்போது முடிவுகளை வெளியிட்டு உள்ள நிலையில், மாயாவதியின் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.


Next Story