4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல் - மத்திய மந்திரி தகவல்


4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல் - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2021 4:44 PM GMT (Updated: 10 Oct 2021 4:44 PM GMT)

4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல் நிறுவனம். மத்திய மந்திரி டுவிட்டரில் பதிவு.

புதுடெல்லி,

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஏற்கெனவே, இந்தியாவில் பல பகுதிகளில் 4 ஜி சேவையை தொடங்கி உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு இலவச 4 ஜி சிம் வழங்கி வருகிறது. இதுவே இந்தியாவின் முதல் உள்நாட்டு 4 ஜி நெட்வொர்க் ஆகும்.

இந்நிலையில் தற்போது தகவல் தொடர்பு மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய 4 ஜி நெட்வொர்க்கான பி.எஸ்.என்.எல் மூலம்  முதல் முறையாக பேசியதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டம் நிறைவேறத் தொடங்கி இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். 


Next Story