மின்சாரம், நிலக்கரித்துறை மந்திரிகளுடன் உள்துறை மந்திரி அவசர ஆலோசனை


மின்சாரம், நிலக்கரித்துறை மந்திரிகளுடன் உள்துறை மந்திரி அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 11 Oct 2021 10:01 AM GMT (Updated: 11 Oct 2021 10:01 AM GMT)

மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுடெல்லி,

நாட்டின் மின்சார தேவையில் சுமார் 70 சதவீதத்தை, இந்தியாவில் உள்ள 135 அனல் மின் உற்பத்தி நிலையங்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றன. அனல் மின் உற்பத்திக்கு நிலக்கரி ஆதாரமாக உள்ளது. இதற்கிடையில், நாட்டில் மின் தேவை அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தையை அதிகரிக்க நிலக்கரிக்கான தேவை பெருகி வருகிறது. 

சீனாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால், நிலக்கரிக்கு உள்நாட்டு உற்பத்தியை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. இதனால், இந்தியாவில் நிலக்கரி தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், மத்திய மின்சாரத்துறை மந்திரி ஆர்.கே. சிங் மற்றும் மத்திய நிலக்கரித்துறை மந்திரி பரல்ஹட் ஜோஷியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நாட்டில் உள்ள நிலக்கரி கையிருப்பு, மின்சார தேவை மற்றும் உற்பத்தி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். 

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மந்திரிகளுடன் தேசிய அனல்மின் கழக அதிகாரிகள் உள்பட பல்வேறுத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Next Story