போராட்ட வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் நினைவு நிகழ்ச்சிக்காக குவியும் வெளிமாநில மக்கள் லகிம்பூர் கேரியில் பரபரப்பு


போராட்ட வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் நினைவு நிகழ்ச்சிக்காக குவியும் வெளிமாநில மக்கள் லகிம்பூர் கேரியில் பரபரப்பு
x

போராட்ட வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் நினைவு நிகழ்ச்சிக்காக குவியும் வெளிமாநில மக்கள் லகிம்பூர் கேரியில் பரபரப்பு.

லக்னோ, 

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் கடந்த 3-ந் தேதி நடந்த வன்முறையில் கொல்லப்பட்ட 4 விவசாயிகளுக்கான நினைவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதற்காக திகோனியாவில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு இருக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து விவசாயிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் இன்று பங்கேற்கிறார்கள். அத்துடன் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட விவசாய அமைப்பு தலைவர்களும் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இநத நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு அரசியல் பிரமுகர்களும் விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அரசியல் கட்சியினருக்கு அனுமதி கிடையாது என்றும், விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் விவசாய அமைப்புகள் தெரிவித்து உள்ளனர்.

கொல்லப்பட்ட விவசாயிகளின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருவதால் லகிம்பூர் கேரியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அங்கு சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story