தேசிய செய்திகள்

மராட்டியத்தில் தியேட்டர்களை திறக்க வழிகாட்டு நெறிமுறை வௌியீடு + "||" + Guideline for opening theaters in Maharashtra

மராட்டியத்தில் தியேட்டர்களை திறக்க வழிகாட்டு நெறிமுறை வௌியீடு

மராட்டியத்தில் தியேட்டர்களை திறக்க வழிகாட்டு நெறிமுறை வௌியீடு
மராட்டியத்தில் தியேட்டர்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வணிக வளாகங்கள், மைதானங்கள், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல வருகிற 22-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்கவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தநிலையில் நேற்று தியேட்டர்களை திறக்க மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில் சமூக இடைவெளியை உறுதி செய்ய தியேட்டர், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அரசின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தியேட்டர் வளாகத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் சரியான இடைவெளி விட வேண்டும். கேண்டீன்களில் பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்கள் மட்டும் விற்பனை செய்யப்படலாம். வெளியில் இருந்து உணவுப்பொருள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாது. பார்வையாளர்கள் முககவசம் அணிந்து இருக்க வேண்டும். தியேட்டர் வளாகத்தில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும். தியேட்டர் வளாகத்தில் யாரும் எச்சில் துப்பக்கூடாது. பார்வையாளர்களை உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு தான் அனுமதிக்க வேண்டும்.

இதேபோல பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், அல்லது ஆரோக்கியசேது செயலியில் அவர் பாதுகாப்பாக உள்ளார் என குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். தியேட்டரில் குளிர்சாதன வசதி 24 முதல் 30 டிகிரி வரை இருக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு; உத்தவ் தாக்கரே சாமி தரிசனம்
மராட்டியத்தில் 6 மாதத்திற்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. மும்பா தேவி கோவிலில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
2. மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்: தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
3. மராட்டியத்தில் கல்லூரிகளுக்கான கல்வி ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கும் - மந்திரி தகவல்
மராட்டியத்தில் கல்லூரிகளுக்கான கல்வி ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த் தெரிவித்துள்ளார்.
4. மராட்டியத்தில் அடுத்த மாதம் 5-ந் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால் காலியான உள்ளாட்சி இடங்களுக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
5. மராட்டியத்தில் 2024-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: நானா படோலே
மராட்டியத்தில் 2024-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என நானா படோலே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.