ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியின் பேரன் அரசு வேலையில் இருந்து நீக்கம்


ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியின் பேரன் அரசு வேலையில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 17 Oct 2021 5:08 AM GMT (Updated: 17 Oct 2021 5:08 AM GMT)

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி கிலானி கடந்த செப்டம்பர் 1-ம் தேதி காலமானார்

ஸ்ரீநகர், 

மறைந்த பிரிவினைவாத தலைவர் சையது அலி கிலானியின் பேரன் அனீஸ் உல் இஸ்லம், அரசு வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அரசு வேலையிலிருந்து  அனீஸ் உல் இஸ்லாம் நீக்கப்பட்டார். அனீஸ் உல் இஸ்லாம் உள்பட  கடந்த 6 மாதங்களில் ஜம்மு காஷ்மீர் அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. 

பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் அனுமதியுடன் 4-பேரும் அரசியலமைப்புச் சட்டம் 311(2)(சி)பிரிவின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சட்டப்பிரிவின் கீழ் அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டில் மட்டுமே ஊழியர்கள் முறையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story