தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை, நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு + "||" + Heavy rains, landslides in Kerala; The death toll rose to 21

கேரளாவில் கனமழை, நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

கேரளாவில் கனமழை, நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.
கோட்டயம்,

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி மற்றம் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  சபரிமலை கோவிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே  கேரளா மாநிலம் கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.  கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேரும், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேரும் உயிரிழந்தனர்.  பூவஞ்சி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 23 பேரில் இதுவரை 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது என மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்து உள்ளது.  நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது..!!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. நாட்டில் 15-18 வயதினருக்கு செலுத்திய தடுப்பூசி 52% ஆக உயர்வு
நாடு முழுவதும் இதுவரை 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு 52% தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.
3. நாட்டில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 160 கோடி
மத்திய சுகாதார மந்திரி கூறும்போது நாட்டில் இதுவரை செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 160 கோடியை கடந்துள்ளது என கூறியுள்ளார்.
4. இமாசல பிரதேசம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு; தொழிலாளர் உயிரிழப்பு
இமாசல பிரதேசத்தில் கட்டுமான பணியில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
5. புதுவையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்வு
புதுவையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்த்தப்பட உள்ளது.