மாநிலங்களுக்கு 101 கோடி கொரோனா தடுப்பூசி வினியோகம்: மத்திய சுகாதார அமைச்சகம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Oct 2021 8:04 PM GMT (Updated: 17 Oct 2021 8:04 PM GMT)

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 101 கோடி கொரோனா தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மத்திய அரசு 101.70 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வினியோகம் செய்துள்ளது. இவற்றில் பொதுமக்களுக்கு செலுத்தியது போக மாநில அரசுகளிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 10.42 கோடி தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.

இந்த தரவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.


Next Story