தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது + "||" + 3 held in Noida over pro-Pakistan sloganeering during religious procession

உத்தரபிரதேசம்: மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது

உத்தரபிரதேசம்: மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார் 20 பகுதியில் நேற்று இஸ்லாமிய மதத்தின் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது, நடைபெற்ற ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

அந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் சிலர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் சிலர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷம் எழுப்பும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. 

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மத ஊர்வலத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷம் எழுப்பிய சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிட்ம போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்து ஆவணங்களை தூக்கிச்சென்ற கில்லாடி ஆடு...!
பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கிருந்த ஆவணங்களை வாயில் கவ்வி தூக்கிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
2. விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போர் விமான டயர்கள் திருட்டு
உத்தரபிரதேசத்தில் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட மீரஜ் ரக போர் விமான டயர்கள் திருடப்பட்டுள்ளது.
3. நாட்டின் வளர்ச்சிக்கு உ.பி முக்கிய பங்கு வகிக்கிறது - யோகி ஆதித்யநாத்
நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரபிரதேசம் முக்கிய பங்கு வகிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உ.பி தேர்வு
இந்தியாவில் சினிமா படப்படிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரபிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
5. உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து
வினாத்தாள் கசிந்ததால் உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.