தேசிய செய்திகள்

100 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு- பிரதமர் மோடி நன்றி + "||" + India's vaccination feat a ‘testament’ to its ability, says Bill Gates

100 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு- பிரதமர் மோடி நன்றி

100 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு- பிரதமர் மோடி நன்றி
இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி நேற்று வரலாற்று சாதனை படைத்தது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணியில் புதிய மைல் கல் சாதனையாக இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.  

அந்த வகையில், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான  பில்கேட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:"இந்தியா 1 பில்லியன் தடுப்பூசிகளை செலுத்துள்ளது.  இந்தியாவின் கண்டுபிடிப்பு, உற்பத்தி செய்யும் திறன் மற்றும் கோவின் செயலின் உதவியுடன் லட்சக்கணக்கன சுகாதார ஊழியர்களின் முயற்சிகளுக்கான சான்றாக இது உள்ளது.  இதற்காக,பிரதமர் மோடி,உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்கள்",என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்,இதற்கு பதில் அளிக்கும் வகையில் பில்கேட்ஸ்க்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்."1 பில்லியன் தடுப்பூசி மைல்கல்லை எட்டுவதில் இந்திய விஞ்ஞானிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் முயற்சிகளுக்கு உங்கள் பாராட்டுக்காக நன்றி பில்கேட்ஸ்.இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளில்  இந்தியா உறுதியான பங்குதாரராக நீடிக்கிறது”  என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை டெஸ்ட்டில் நியூசிலாந்து திணறல்; இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
2. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
3. மும்பை டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி
நியூசிலாந்து அணியைவிட 332-ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.
4. மும்பை டெஸ்ட்: இந்திய அணி அபார பந்து வீச்சு- நியூசிலாந்து 62 ரன்களில் ஆல் அவுட்
நியூசிலாந்துக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கியுள்ளது.
5. ரஷிய அதிபர் இந்தியா வருகை - முக்கியமான 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!
இந்தியா - ரஷியா இடையே முக்கியமான 10 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்று ரஷிய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.