தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.106.98க்கு விற்பனை + "||" + Petrol price in Pondicherry sells for Rs 106.98

புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.106.98க்கு விற்பனை

புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.106.98க்கு விற்பனை
புதுச்சேரியில் பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து ரூ.106.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரி,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.106.04க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.102.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.  இந்த நிலையில், புதுச்சேரியில் பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து ரூ.106.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோன்று, டீசல் விலை 36 காசுகள் உயர்ந்து ரூ.102.18க்கு விற்கப்படுகிறது.  புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.107ஐ நெருங்கியுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை: மேலும் 5 பயணவழி ஓட்டல்களில் அரசு பஸ்கள் நிற்க தடை
தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 5 பயணவழி ஓட்டல்களில் அரசு பஸ்கள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. ஆந்திர பிரதேசத்தில் புதிய ஊதிய உயர்வு உத்தரவுக்கு எதிர்ப்பு - அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஆந்திர பிரதேசத்தில் புதிய ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
3. மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.
4. பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
கடலூரில் பூக்கள் விலை கிடுகிடு வென உயர்ந்தது.
5. செங்குன்றத்தில் ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் கைது
செங்குன்றத்தில் ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.