இரண்டு நாகபாம்புகள் சண்டையிடும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ


இரண்டு நாகபாம்புகள் சண்டையிடும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ
x
தினத்தந்தி 31 Oct 2021 11:55 AM GMT (Updated: 31 Oct 2021 11:55 AM GMT)

பாட்னா பூங்காவில் இரண்டு நாகபாம்புகள் சண்டையிடும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

பாட்னா

பீகாரில் உள்ள பாட்னா உயிரியல் பூங்காவில் இரண்டு பாம்புகள் விளையாடிக் கொண்டு இருக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இரண்டு நாகப்பாம்புகளின் வீடியோவை பீகார் அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை முதன்மைச் செயலாளர் தீபக் குமார் சிங் டுவிட்டரில் பகிர்ந்ததை அடுத்து வைரலானது. வைரலான வீடியோ நெட்டிசன்களை முழுவதுமாக மகிழ்வித்துள்ளது. இதனை டுவிட்டரில் பலரும் ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

1.32 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், இரண்டு பாம்புகளும் படம்  விரித்த படி  நிற்பதைக் காணலாம். மேலும், வீடியோ தொடரும் போது, ​​நாகப்பாம்புகளில் ஒன்று விளையாட்டுத்தனமாக மற்றொன்றைத் தாக்க முயல்கிறது, மேலும் மீண்டும் தனது தலையை உயர்த்தியபடி நிற்கின்றது.



Next Story