சிலிண்டர் விலை உயர்வு: மீண்டும் அடுப்பை நோக்கி ஏழைக் குடும்பங்கள் - ராகுல்காந்தி


சிலிண்டர் விலை உயர்வு: மீண்டும் அடுப்பை நோக்கி ஏழைக் குடும்பங்கள்  -  ராகுல்காந்தி
x
தினத்தந்தி 6 Nov 2021 1:01 PM GMT (Updated: 6 Nov 2021 1:01 PM GMT)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல லட்சம் ஏழைக் குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்பு பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

தீபாவளிக்கு முன்பாக அதாவது நவம்பர் 1-ம் தேதி வர்த்தக சிலிண்டர் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 266 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் தான் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் உயர்வு அடைந்திருந்தது.

சிலிண்டர் விலை தொடர்ச்சியாக பல மாதங்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் தான் இந்தி மொழியில் வெளியான ஒரு செய்தி இணையதளத்தில் , 

மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட பகுதிகளில், 42% கிராம மக்கள் தங்களது சமையல் எரிவாயு இணைப்புகளை பயன்படுத்தாமல் பழைய முறையில் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கட்டுரையை தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ள ராகுல்காந்தி கூறுகையில், 

பல லட்சம் மக்கள் விறகு அடுப்பு பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் . நரேந்திர மோடியின் முன்னேற்ற வாகனம் முன்னோக்கி செல்லாமல் பின்னே சென்று கொண்டுள்ளது. அதற்குப் பிரேக்கும் ரிப்பேராகி உள்ளது. 

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story