தேசிய செய்திகள்

தலித் தலைவர்கள் பற்றி சித்தராமையா கீழ்தரமாக பேசுவாா் என எதிர்பார்க்கவில்லை: சி.டி.ரவி + "||" + Siddaramaiah is not expected to speak in a derogatory manner about Dalit leaders: C. T. Ravi

தலித் தலைவர்கள் பற்றி சித்தராமையா கீழ்தரமாக பேசுவாா் என எதிர்பார்க்கவில்லை: சி.டி.ரவி

தலித் தலைவர்கள் பற்றி சித்தராமையா கீழ்தரமாக பேசுவாா் என எதிர்பார்க்கவில்லை: சி.டி.ரவி
சித்தராமையா தனது சமகால தலித் தலைவர்கள் பற்றி கீழ்தரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. பா.ஜனதாவுக்கு வந்த தலைவர்கள் அதிகாரத்திற்காக வரவில்லை என சி.டி.ரவி கூறியுள்ளார்.
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலித் தலைவர்கள் பற்றி கீழ்தரமான கருத்துகளை தெரிவித்துள்ளார். தலித் தலைவர்கள் தங்களது வயிற்று பிழைப்புக்காக பா.ஜனதாவில் சேருவதாக சித்தராமையா சொல்லி இருக்கிறார். தலித் தலைவர்கள் பற்றி சித்தராமையாவுக்கு இவ்வளவு பெரிய அதிருப்தி இருக்கிறது என்பது தெளிவாகி இருக்கிறது. சித்தராமையா தனது சமகால தலித் தலைவர்கள் பற்றி கீழ்தரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. பா.ஜனதாவுக்கு வந்த தலைவர்கள் அதிகாரத்திற்காக வரவில்லை. பா.ஜனதாவின் கொள்கை, நம்பிக்கையால் வந்தவர்கள்.

உங்களது சமகால தலைவர்களான கோவிந்த் கார்ஜோள், ரமேஷ் ஜிககினகி தற்போது எப்படி பணியாற்றுகிறார்கள்?, அரசியலில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் தலித் தலைவர்கள் பற்றி கீழ்தரமாக பேசுவது தான், அந்த சமுதாயத்தினர் மீது நீங்கள் காட்டும் அக்கறை?. ஜனதா பரிவார் தான் உங்களது அரசியல் வளர்ச்சிக்கு காரணம். அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தீர்கள். தற்போது அந்த கட்சியின் தலைவர்கள் பற்றியே கீழ்தரமாக ஏன் பேசுகிறீர்கள். தலித் தலைவர்களை உங்களது தேவைக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது ஏன்?.

இவ்வாறு சி.டி.ரவி கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. “பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை” - சித்தராமையா குற்றச்சாட்டு
பா.ஜனதாவுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என சித்தராமையா விமர்சித்துள்ளார்.
2. கர்நாடகத்தில் பா.ஜனதா வளர்ச்சி அடைய சித்தராமையாவே காரணம்: குமாரசாமி
எடியூரப்பாவுடன் உள்ஒப்பந்தம் செய்து கொண்டதால், கர்நாடகத்தில் பா.ஜனதா வளர்ச்சி அடைய சித்தராமையாவே காரணம் என்று குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
3. ஜனதாதளம் (எஸ்) கட்சியில் குமாரசாமி குடும்பத்தினரை தவிர வேறு யாரும் தலைவர்கள் ஆக முடியாது: சித்தராமையா
ஜனதாதளம் (எஸ்) கட்சியில் குமாரசாமி குடும்பத்தினரை தவிர வேறு யாரும் தலைவர்கள் ஆக முடியாது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
4. கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ சித்தராமையாவே காரணம்: தேவேகவுடா
காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியதால் ஆட்சி அமைத்தோம் என்றும், கூட்டணி அரசு கவிழ சித்தராமையாவே காரணம் என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
5. நிலக்கரி தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா? - சித்தராமையா கேள்வி
நிலக்கரி தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.