தேசிய செய்திகள்

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் + "||" + Moderate magnitude 4.7 earthquake 29 km southeast of Imphal

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்
மணிப்பூரில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இம்பால்,

மணிப்பூரில் இன்று மதியம்  2.15 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவானது.

மாநில தலைநகர் இம்பால் மற்றும் கிழக்கு இம்பால் பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.

பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளை ஆய்வு செய்யும் நில அதிர்வுக்கான தேசிய மையம் இந்த தகவலை பதிவிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்த துல்லியமான அளவு மற்றும் பூகம்பத்தின் மையப்பகுதி ஆகியன குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ள காக்சிங் பகுதியில் பூகம்பத்தின் மையப்பகுதி அமைந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், பொருட்கள் குலுங்கி கீழே விழுந்துள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்து நாட்டில் உள்ள கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்
இமாச்சல பிரதேசத்தில் இன்று ரிக்டர் 3.4 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 வீடுகள் தரைமட்டம்
ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 2 பேர் உயிரிழந்தனர்.
4. இந்தோனேசியா, பிலிப்பைஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.