120 கிலோ போதைப்பொருள் பறிமுதல் :குஜராத் தீவிரவாத தடுப்புப் படை அதிரடி


120 கிலோ போதைப்பொருள் பறிமுதல் :குஜராத் தீவிரவாத தடுப்புப் படை அதிரடி
x
தினத்தந்தி 15 Nov 2021 5:01 AM GMT (Updated: 15 Nov 2021 5:01 AM GMT)

கடந்த செப்டம்பர் மாதம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 3,000 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

குஜராத் 

குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் உள்ள ஜின்ஜுடா கிராமத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள 120 கிலோ  போதைபொருளை ( கெராயின்) குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று  வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குஜராத் உள்துறை மந்திரி  ஹர்ஷ் சங்கவி கூறியதாவது :

போதைப்பொருளை ஒழிப்பதில் குஜராத் காவல்துறை முன்னணியில் இருந்து வருகிறது.குஜராத்  தீவிரவாத தடுப்புப் படையினர் சுமார் 100 கிலோ போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.இது குஜராத் காவல்துறையின் மற்றொரு சாதனை.

இவ்வாறு அவர் கூறினார் .

 கடந்த செப்டம்பர் மாதம் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 3,000 கிலோ கிராம் போதைப்பொருளை கைப்பற்றிய சில மாதங்களுக்குப்  இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story