தொலைக்காட்சி விவாதங்கள் அதிக மாசை உருவாக்குகின்றன: சுப்ரீம் கோர்ட் சாடல்


தொலைக்காட்சி விவாதங்கள் அதிக மாசை உருவாக்குகின்றன: சுப்ரீம் கோர்ட் சாடல்
x
தினத்தந்தி 17 Nov 2021 11:35 AM GMT (Updated: 17 Nov 2021 11:35 AM GMT)

டெல்லியில் காற்று மாசு தொடர்பாக தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் விவாதங்கள் அதிக மாசை உருவாக்குகின்றன என சுப்ரீம் கோர்ட் கடுமையாக சாடியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு தொடர்பாக தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் விவாதங்கள் அதிக மாசை உருவாக்குகின்றன என சுப்ரீம் கோர்ட் கடுமையாக சாடியுள்ளது.  டெல்லியில் காற்று மாசு அபாய அளவில் உள்ளது. காற்று மாசு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொலைக்காட்சியில் காற்று மாசு தொடர்பாக நடைபெறும் விவாதங்கள் தான்  பிற அனைத்தையும் விட அதிக மாசை உருவாக்குவதாக சாடியது. 

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கூறியதாவது;- 

டெல்லியில் ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஓட்டல்களில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் வயல்வெளிகளில் கழிவுகளை எரிப்பது டெல்லியில் மாசு ஏற்படுவதற்கு 30 அல்லது 40 சதவிகிதம் காரணம் என விமர்சிக்கின்றனர். 
ஆனால், எந்த சூழலில் அவர்கள் பயிர்க்கழிவுகளை எரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது குறித்து யாரும் ஆராய்வது இல்லை.உங்களிடம் ஏதேனும் அறிவியல் செயல்முறை இருந்தால், அவர்களிடம் சென்று சொல்லுங்கள்

 தடை செய்யப்பட்டிருந்தும் பட்டாசுகள் எப்படி வெடிக்கப்படுகின்றன. இந்த தடை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்கள் மற்றவற்றை விட அதிக மாசை உருவாக்குகின்றன. என்ன நடக்கிறது, என்ன பிரச்சினை என்று பேசுபவர்களுக்குப் புரியவில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற விவாதங்களில் அவை வெளிப்படுகின்றன” எனக்கூறியுள்ளது. 


Next Story