தேசிய செய்திகள்

2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்: மத்திய சுகாதார மந்திரி தகவல் + "||" + Fully vaccinated individuals surpass partially vaccinated for the first time: Mansukh Mandaviya

2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்: மத்திய சுகாதார மந்திரி தகவல்

2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்: மத்திய சுகாதார மந்திரி தகவல்
2 ‘டோஸ் ’ கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை விட 2 ‘டோஸ் ’ செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்ட நிலவரம் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள்:-

* இந்தியாவில் இன்று (நேற்று) காலை 7 மணி நிலவரப்படி 113 கோடியே 68 லட்சத்து 79 ஆயிரத்து 685 ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் டோசாக 75 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 81 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 2-வது டோசாக 38 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 604 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் டோசாக போடப்பட்ட 75 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 81-ல் இருந்து, 2-வது டோசாக செலுத்தப்பட்ட 38 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 604-ஐ கழிக்கிறபோது அது 37 கோடியே 45 லட்சத்து 68 ஆயிரத்து 477 ஆகும். இதுவே முதல் ‘டோஸ் ’ போட்டவர்கள் எண்ணிக்கை ஆகும். எனவே ஒரு ‘டோஸ் ’ போட்டவர்களைக் காட்டிலும் 2-வது ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகம்.

* நாட்டில் தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தின் சாதனை, முதல் முறையாக ஒரு ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை விட 2 ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

* நாட்டின் கூட்டு மனப்பாங்குக்கு பாராட்டுகள்.

*ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள்’ என்ற ஒரு மாத கால பிரசாரத்தின் முடிவில் நாட்டில் தகுதி வாய்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டு விடுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றுபட்டு வெல்வோம்” என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மேலும் 12,587- பேருக்கு கொரோனா- நேற்றை விட 31 சதவீதம் குறைந்தது
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,587- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. வியாபாரிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்: திருவள்ளூர் நகராட்சி ஆணையர்
வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
3. இந்தியாவின் வளர்ச்சியை இளைஞர்கள் முன்னெடுத்து செல்கின்றனர்: பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி அடைந்ததில் இளைஞர்களின் பங்கை பல்வேறு மட்டத்தில் நாம் கண்டோம் என பிரதமர் மோடி பேசினார்.
4. அமெரிக்காவில் இதுவரை 50.6 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 6.8 கோடி பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 50.5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 6.7 கோடி பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.