தேசிய செய்திகள்

தடுப்பூசி குறித்த தயக்கமே கொரோனாவை எதிர்கொள்வதில் பெரும் சவால்! - அடார் பூனவாலா + "||" + Vaccine hesitancy in India greatest threat in overcoming COVID-19 pandemic: SII CEO Adar Poonawalla

தடுப்பூசி குறித்த தயக்கமே கொரோனாவை எதிர்கொள்வதில் பெரும் சவால்! - அடார் பூனவாலா

தடுப்பூசி குறித்த தயக்கமே கொரோனாவை எதிர்கொள்வதில் பெரும் சவால்! - அடார் பூனவாலா
தடுப்பூசி குறித்த தயக்கம் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் பெரும் தடையாக உள்ளது என்று சீரம் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அடார் பூனவாலா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 20 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படாமல் இருக்கின்றன. பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி குறித்த தயக்கம் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் பெரும் தடையாக உள்ளது எனும் கருத்தை கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அடார் பூனவாலா தெரிவித்துள்ளார்.

“எங்கள் நிறுவனம் சோர்வின்றி உழைத்து  நாட்டுக்காக தடுப்பூசிகளை தயாரித்து வழங்கியுள்ளது” என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியுடைய அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும்  கேட்டுக் கொண்டுள்ளார்.


நாட்டில் செலுத்தப் பட்டிருக்கும் 90 சதவீத கொரோனா தடுப்பூசி,  இந்நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியே ஆகும்.

அதிக அளவில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை 41 சதவீதம் பேர் மட்டும் தான் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர்.   

கொரோனா தொற்று தற்போது வெகுவாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

வீடு தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் தற்போது நடைமுறையாக்கி உள்ளன. இந்த திட்டம் மூலமாக, குறைந்தது 18 வயது நிரம்பிய அனைத்து நபர்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று இலக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், டாக்டர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா
ராமநாதபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், டாக்டர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளது.
2. இந்தியாவில் உச்சமடையும் கொரோனா : ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது.
3. கொரோனா இப்போது முடிவுக்கு வராது - உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்
கொரோனா வைரஸ் தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.
4. பொங்கல் விடுமுறை எதிரொலி 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடைந்துள்ளதால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மேலும் 435 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 435 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.