தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + Militant killed in encounter in J-K's Kulgam

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது,  அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் உள்ளனரா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு-காஷ்மீர்: சீன துப்பாக்கிகளுடன் 3 பேரை கைது செய்த இந்திய ராணுவம்
இரண்டு சீன துப்பாக்கிகளுடன் 3 பேரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜம்மு காஷ்மீரில்வரும் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
3. ஜம்மு காஷ்மீரில் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.
5. ஜம்மு காஷ்மீர்: காவல் நிலையத்தின் மீது கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் காவல் நிலையத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.