தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசம்: கள்ளநோட்டுகள் அச்சடித்த ஒருவர் கைது + "||" + Man arrested with fake currency in Balongi

உத்தரப்பிரதேசம்: கள்ளநோட்டுகள் அச்சடித்த ஒருவர் கைது

உத்தரப்பிரதேசம்: கள்ளநோட்டுகள் அச்சடித்த ஒருவர் கைது
கைதானவரிடமிருந்து மடிக்கணினி, கலர் பிரிண்டர், உயர்தர காகிதம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
நொய்டா,

உத்தரப்பிரதேசத்தின் பலோங்கி என்னுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சிடப்படுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் அங்கு கள்ளநோட்டு அச்சடிப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார், அங்கு கள்ளநோட்டு அச்சடித்துவந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் மொராதாபாத்தைச் சேர்ந்த நவாப் என்கிற பெரோஸ் என்பதும், அவர் கடந்த 3 மாதங்களாக கள்ளநோட்டு அச்சடித்து வந்தது தெரியவந்தது. ஒருமுறை பலோங்கியில் வசிக்கும் பிஜேந்தர் என்பவர் தனக்கு கள்ளநோட்டு அடிப்பது பற்றி சொல்லித்தந்ததாக தெரிவித்தார். தான் அடித்த கள்ளநோட்டுகளை உள்ளூர் சந்தையிலேயே புழக்கத்தில் விட்டதாக அவர் கூறினார்.

அவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.69,000 மதிப்புள்ள கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். மேலும் நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய மடிக்கணினி, கலர் பிரிண்டர், போலி நாணயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உயர்தர காகிதம் ஆகியவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார், நவாப்புக்கு கள்ளநோட்டு அச்சடிக்க சொல்லிக்கொடுத்த பிஜேந்தரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு காகிதம் மற்றும் உபகரணங்களை யார் சப்ளை செய்தார்கள் என்றும் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரப்பிரதேசம்: 6 வயது சிறுவனை கொன்ற சிறுத்தை!
உ.பி.யின் கதர்னியா வனவிலங்கு சரணாலயம் அருகில் 6 வயது சிறுவன் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தான்.
2. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்: கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி ..?
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
3. கொரோனா அதிகரிப்பு: உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகள் மூடல்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உத்தரப்பிரதேச அரசு பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.
4. அதிக சர்வதேச விமான நிலையங்களை கொண்ட மாநிலமாகிறது உத்தரப்பிரதேசம்...!!
உத்தரபிரதேசத்தில் 2012 வரை லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன.
5. உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
அலகாபாத் முதல் தீன் தயாள் உபாத்யாயா வரை செல்லும் சரக்கு ரெயில் இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.