தேசிய செய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு...! + "||" + India Coronavirus Report on November 24

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு...!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு...!
இந்தியாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 7 ஆயிரத்து 579 ஐ விட சற்று அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 949 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 45 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் இன்று 703 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 703 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் நேற்றை விட இன்றைய கொரோனா பாதிப்பு அதிகம்
கேரளாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
3. தமிழ்நாட்டில் இன்று 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா வைரசை கொல்லும் ‘சூயிங்கம்’ - அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிக்கிறார்கள்
கொரோனா வைரசை கொல்லும் சூயிங்கத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிக்கிறார்கள்.
5. டிச.6: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் மேலும் 719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.