தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், மதுபானத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடி..! + "||" + liquor shops in mandsaur offer discount for those who take second covid jab

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், மதுபானத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடி..!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், மதுபானத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடி..!
மத்தியபிரதேச மாநிலம் மந்த்சவுர் மாவட்டத்தில் இருக்கும் சாராய கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 10 சதவீதம் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டி வருவதால் ஒரு புதுமையான யுக்தி அங்கு  கையாளப்பட்டுள்ளது.

அதன்படி, மத்தியபிரதேச மாநிலம் மந்த்சவுர் மாவட்டத்தில் இருக்கும் சாராய கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 10 சதவீதம் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று எடுத்துக் கொள்வோருக்கு இந்த சிறப்பு சலுகை பொருந்தும்.

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆனால், இதனை அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான பா.ஜ.கவை சேர்ந்த மந்த்சவுர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் யஷ்பால் சிங் சிசோதியா கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த புதுமையான முயற்சி மது குடிக்க மக்களை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். 

மேலும், இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் பட்சத்தில், வரும் நாட்களில் பிற பகுதிகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான்,  பொதுமக்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் நியூசிலாந்துக்குள் நுழையலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2. கொரோனா 3-வது அலை வந்தாலும் மோசமானதாக இருக்காது..!! மருத்துவ நிபுணர்கள் கணிப்பு
கொரோனா 3-வது அலை வந்தாலும், அது மோசமானதாக இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
3. கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் குழந்தை பிறப்பு சரிவு..!
கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் குழந்தை பிறப்பு சரிவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
4. மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. கொரோனா பாதிப்பு: கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனிடம் நலம் விசாரித்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.