தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்: கேரளாவில் 25 யானைகள் பலி..!! + "||" + Covid restrictions affected captive elephants in Kerala due to lack of exercises : Experts

கொரோனா கட்டுப்பாடுகள்: கேரளாவில் 25 யானைகள் பலி..!!

கொரோனா கட்டுப்பாடுகள்: கேரளாவில் 25 யானைகள் பலி..!!
கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலியாக கேரளாவில் இதுவரை 25 யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலக்காடு, 

யானைகளுக்கு பெயர் பெற்ற கேரள மாநிலத்தில் கோவில்களிலும், தனியார் பலராலும் யானைகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு மொத்தம் 453 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா கால கட்டுப்பாடுகள், இந்த வளர்ப்பு யானைகளையும் பாதித்துள்ளன. அதிக நேரம் கட்டிப் போடப்பட்டதாலும், போதிய பயிற்சி இன்றியும் பல யானைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் விழாக்கள் நடைபெறுவது குறைந்துள்ளதாலும், மற்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் அவற்றில் யானைகள் பங்கேற்பது குறைந்துள்ளது. அவை பெரும்பாலான நேரங்களில் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன. மரம் தூக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவை தவிர மற்ற யானைகளின் நிலை இதுதான். இதனால் நடைபயிற்சி போன்றவை இல்லாமல் யானைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கால்நடை டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற சூழலில் கேரளாவில் இந்த ஆண்டில் இதுவரையிலான 11 மாதங்களில் 25 வளர்ப்பு யானைகள் இறந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை செரிமானக் கோளாறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவை.

யானைகளின் சராசரி ஆயுள்காலம் 70 முதல் 80 ஆண்டுகள் என்றபோதும், மனிதர்களால் பராமரிக்கப்படும் யானைகள் பெரும்பாலும் சுமார் 60 வயதில் இறந்துவிடுவதுதான் சோகம்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல்: கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும்
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கேரளாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 528- ஆக உயர்வு
கேரளாவில் ஒமைக்ரான் இன்று 48 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
3. கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை..!
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
4. கேரளாவில் மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
இந்தியாவிலும் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கால் பதித்த ஒமைக்ரான் காட்டுத்தீ போல பரவி விட்டது.
5. கேரளாவில் ஒரே நாளில் 29 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
கோளாவில் இது வரை 181 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது.