தனியார் மருத்துவக்கல்லூரியில் 182 மாணவர்கள்- பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று


தனியார் மருத்துவக்கல்லூரியில்  182 மாணவர்கள்- பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 26 Nov 2021 9:39 AM GMT (Updated: 26 Nov 2021 9:39 AM GMT)

கர்நாடகாவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில், 182 மாணவர்கள், பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


பெங்களூரு: 

கர்நாடகாவில் தர்வாத் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பர் 17ம் தேதி புதிதாக கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அக்கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் என சுமார் 3,000 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், சமீபத்தில் கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, முதலில் 300 பேரை பரிசோதனை செய்ததில் 66 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை முடிவுகள் வெளிவந்திருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டவர்கள் எனவும், அவர்களில் பலருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. அனைவரும் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story