தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது; ராகுல் காந்தி டுவிட் + "||" + New variant is a serious threat-Rahul Gandhi

உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது; ராகுல் காந்தி டுவிட்

உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது; ராகுல் காந்தி டுவிட்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த புதிய ’ஒமிக்ரான்’ (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த புதிய  ’ஒமிக்ரான்’  (B.1.1.529) வகை கொரோனா  உலக  நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது.

சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என இந்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், வரும் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்க மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ள சூழலில், புதிய வகை கொரோனா மிரட்டுவதால்  சர்வதேச விமான போக்குவரத்துக்கு சேவையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியதை ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலயில், தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசு கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 

“ புதிய வகை கொரோனா மிகவும் அச்சுறுத்தலானது.  நாட்டு மக்களுக்கு தடுப்பூசி  பாதுகாப்பை அளிப்பதில் இந்திய அரசாங்கம் தீவிரமாக  இருக்க வேண்டும். குறைந்த  அளவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையை வெளியிடுவதில் எந்த வித ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது” எனத்தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. வெறுப்புணர்வை வீழ்த்த தேர்தலே சரியான தருணம்: ராகுல்காந்தி
வட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு.
2. வெறுப்பை வீழ்த்த தேர்தல் சரியான நேரம்: ராகுல் காந்தி
வெறுப்பை பரப்புவர்களை வீழ்த்த தேர்தல் சரியான தருணம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. கச்சா எண்ணெய் விலை குறைவு: எரிபொருள் விலையை குறைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
4. செஞ்சூரியன் டெஸ்டில் வரலாற்று வெற்றி : இந்திய அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
5. சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி ராஜினாமா செய்திருக்க வேண்டும் - ராகுல் காந்தி
மன்மோகன் சிங் பிரதமராக இருந்திருந்தால் சீன எல்லை பிரச்சினையில் ராஜினாமா செய்திருப்பார் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.