ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என சோதனை
11 சர்வதேச விமானங்களில் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு வந்த 3,476 பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
புதுடெல்லி,
ஒமைக்ரான் கொரோனா பரவியுள்ள நாடுகள் உள்பட அபாய (ரிஸ்க்) நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
11 சர்வதேச விமானங்களில் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு வந்த 3,476 பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேருக்கும் மிதமான பாதிப்புகளே உள்ளது எனவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடப்பதகாவும் மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அபாய நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து பயணிகளுக்கு விமான நிலையங்களில் இன்று முதல் தீவிர கண்காணிப்பு, மற்றும் பரிசோதனை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொர்சீயஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்கான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன.
Related Tags :
Next Story