மணிப்பூரில் ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்


மணிப்பூரில் ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Dec 2021 2:39 PM IST (Updated: 7 Dec 2021 2:39 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரில் ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தெங்நவ்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் மோரே நகரில் அசாம் ரைபிள் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அவற்றில் 54 கிலோ பிரவுன் சுகர் மற்றும் 154 கிலோ ஐஸ் மெத் ஆகியவை அடங்கும்.  இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வீடு ஒரு பெண்ணின் வீடாகும்.  அவர் மியான்மர் நாட்டின் மேன்டலே பகுதியை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது.  அவர் சீன நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.


Next Story