ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
பாதுகாப்புப் படையினர் என்கவுன்டரில் ஒரு பயங்கரதியை சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாதுகாப்புப்படையினர் அந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, என்கவுன்டர் நடவடிக்கையாக பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு பயங்கரவாதியை சுட்டுவீழ்த்தினர். மேலும், பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story