எதிர்க்கட்சிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை- மம்தாவுக்கு அழைப்பு இல்லை


எதிர்க்கட்சிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை- மம்தாவுக்கு அழைப்பு இல்லை
x
தினத்தந்தி 14 Dec 2021 3:00 PM GMT (Updated: 14 Dec 2021 3:00 PM GMT)

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்படவில்லை

புதுடெல்லி,

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தால், பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, 12 எம்.பிக்களின் சஸ்பெண்ட்டை ரத்து செய்ய வலியுறுத்தி அடுத்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,  சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத், திமுகவின் டி.ஆர் பாலு, சிபிஎம் கட்சியின் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர்  பங்கேற்றதாக தெரிகிறது. 

 ஆனால்,  திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.  இந்த விவகாரம் குறித்து  ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் சரத்  பவார் பேச வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.  

Next Story