பிரதமர் மோடியுடன் மத்திய ஆசிய நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு..!!


பிரதமர் மோடியுடன் மத்திய ஆசிய நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு..!!
x
தினத்தந்தி 21 Dec 2021 4:03 AM GMT (Updated: 21 Dec 2021 4:03 AM GMT)

பிரதமர் மோடியை 5 மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டாக சந்தித்து பேசினர்.

புதுடெல்லி, 

பிரதமர் மோடியை 5 மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டாக சந்தித்து பேசினர்.

கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் மத்திய ஆசிய நாடுகளாக அழைக்கப்படுகின்றன.

இந்தியா-மத்திய ஆசியா இடையே 3-வது பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஏற்பாட்டில் நடந்த இக்கூட்டத்தில் பங்கேற்க மேற்கண்ட 5 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் டெல்லி வந்திருந்தனர்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட நிலையில், 5 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் நேற்று பிரதமர் மோடியை கூட்டாக சந்தித்து பேசினர். அப்போது, ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, கடந்த 2015-ம் ஆண்டு 5 நாடுகளுக்கும் தான் சுற்றுப்பயணம் செய்ததை மோடி நினைவு கூர்ந்தார். 5 நாடுகளிலும் இந்திய சினிமாக்கள், இசை, யோகா ஆகியவை பிரபலமாக இருப்பதால், இரு தரப்புக்கும் இடையே கலாசார ரீதியான, மக்களுக்கு இடையிலான உறவு நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

அண்டை நாடுகளை விரிவுபடுத்தும் வகையில், 5 மத்திய ஆசிய நாடுகளுடனும் நீண்டகால நட்புறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 5 நாடுகளின் 30-வது சுதந்திர தினத்தையொட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Next Story