அறுவை சிகிச்சை செய்து கொண்ட உத்தவ் தாக்கரே: உடல்நலம் குறித்து கேட்டறிந்த மோடி
அறுவை சிகிச்சை செய்து கொண்ட உத்தவ் தாக்கரேயின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
புதுடெல்லி,
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையான கழுத்து வலியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த மாதம் கழுத்து எலும்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவர் வீட்டில் இருந்தபடி அலுவல் பணியை செய்து வருகிறார். ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுவெளியில் தோன்றாத அவர், முதன் முறையாக சமீபத்தில் சட்டசபை வளாகத்துக்கு வருகை தந்தார்.
இந்தநிலையில் டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முடிந்ததைதொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா அறையில் நடந்த நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவசேனா எம்.பி. விநாயக் ராவத்திடம் உத்தவ் தாக்கரேயின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டார். அப்போது அவர் பிரதமரிடம், உத்தவ் தாக்கரேக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை, தற்போதைய உடல்நிலை குறித்து விளக்கமாக எடுத்து கூறினார்.
Related Tags :
Next Story