இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422- ஆக உயர்வு- மராட்டியத்தில் அதிகம்
இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 422- ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த 2-ந் தேதி கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அது பரவியுள்ளது.
தற்போது நாட்டில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 422-ஐ தொட்டுள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 108 பேரும், அதைத்தொடர்ந்து டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 49 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில் 41 பேரும், கேரளாவில் 38 பேரும், தமிழ்நாட்டில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 - மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் ஊடுருவியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story