ஜம்மு காஷ்மீரில் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று


ஜம்மு காஷ்மீரில் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 2 Jan 2022 4:24 AM GMT (Updated: 2 Jan 2022 4:24 AM GMT)

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி நிலையில், இப்போது ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தை மூட மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story