காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 37 விமானங்கள் ரத்து


காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 37 விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 5 Jan 2022 4:13 PM GMT (Updated: 5 Jan 2022 4:13 PM GMT)

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக கடும் பனிபொழிவு காணப்படுகிறது. இதனால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படும் சூழல் உள்ளது.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக காஷ்மீருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 

இதனால், விமான  நிலையங்களும் பரபரப்பாக காணப்படுகிறது.  இந்த நிலையில், காஷ்மீரில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

5 விமானங்கள் மட்டுமே திட்டமிட்டபடி இயக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதலே காஷ்மீரில் விமான சேவை பாதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. 

விமானம் ரத்து செய்யப்பட்டதால், நூற்றுக்கணக்கான பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். இதனால், விமான நிலையங்களில் குழப்பமான சூழல் காணப்பட்டது. 


Next Story