79% பாதிப்பு; கர்நாடகாவில் கொரோனா மையம் ஆக திகழும் பெங்களூரு நகர்


79% பாதிப்பு; கர்நாடகாவில் கொரோனா மையம் ஆக திகழும் பெங்களூரு நகர்
x

கர்நாடகாவில் 79% பாதிப்புகளுடன் கொரோனாவின் மையம் ஆக பெங்களூரு நகர் உள்ளது.



பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.  கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் தாக்கம் காரணமாக கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

இதனால், கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.  எனினும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இவற்றில் பெங்களூரு நகர் அதிக அளவில் பாதிப்புகளை கொண்டு உள்ளது.  இதில், பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 7,113 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால் கொரோனா பாதிப்பு விகிதம் 10% கடந்துள்ளது என கர்நாடக சுகாதார மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.  கர்நாடகாவில் 79% பாதிப்புகளுடன் கொரோனாவின் மையம் ஆக பெங்களூரு நகர் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story