கொரோனா சிகிச்சை வரிசையில் மேற்கு வங்காளம் 2வது இடம்


கொரோனா சிகிச்சை வரிசையில் மேற்கு வங்காளம் 2வது இடம்
x
தினத்தந்தி 8 Jan 2022 4:32 PM GMT (Updated: 2022-01-08T22:02:04+05:30)

இந்தியாவில் அதிகளவு கொரோனா சிகிச்சை பெறுவோர் வரிசையில் மராட்டியத்திற்கு அடுத்து மேற்கு வங்காளம் 2வது இடம் பிடித்து உள்ளது.கொல்கத்தா,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.  இதேபோன்று, ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு வருகிறது.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கு வங்காளத்தில் 51,384 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இது இந்தியாவின் எண்ணிக்கையில் 10.88 சதவீதம் ஆகும் என தெரிவித்து உள்ளது.

இதனால், மராட்டியத்திற்கு அடுத்து 2வது இடத்தில் மேற்கு வங்காளம் இடம் பிடித்து உள்ளது.  மராட்டியத்தில் 1,45,198 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த 7 நாட்களில் அதிக கொரோனா பாதிப்பு விகிதத்தில் மேற்கு வங்காளம் 19.68 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.  இதேபோன்று, 27 பேருக்கு இதுவரை ஒமைக்ரான் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story