இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் படகு; மடக்கிப் பிடித்தது கடலோர காவல் படை


இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த  பாகிஸ்தான் படகு;  மடக்கிப் பிடித்தது கடலோர காவல் படை
x
தினத்தந்தி 9 Jan 2022 12:12 PM GMT (Updated: 9 Jan 2022 12:12 PM GMT)

இந்திய கடல் எல்லைக்குள் 10 பேருடன் வந்த பாகிஸ்தான் படகு அத்துமீறி நுழந்தது.

அகமதாபாத்,

குஜராத் கடல் பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் 11 கி.மீட்டர் வரை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை  கடலோர காவல் படை மடக்கி பிடித்தது. படகில் 10 பேர் இருந்தனர். அனைவரையும் போர்பந்தர் துறைமுகம் அழைத்து வந்த கடோலோர காவல் படை தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. 

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி  12 பேருடன் வந்த பாகிஸ்தான் படகை மடக்கி பிடித்தனர். இது போன்ற படகுகள் மூலமாக  போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதனால், கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த டிசம்பர்  20 ஆம் தேதி பாகிஸ்தான் படகில் கொண்டு வரப்பட்ட ரூ.400 கோடி மதிப்புள்ள 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இந்திய கடல் பகுதியில்  கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story