டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவு


டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவு
x
தினத்தந்தி 15 Jan 2022 1:01 PM GMT (Updated: 15 Jan 2022 1:01 PM GMT)

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 30 சதவீதத்திற்கும் மேலாக  உள்ளது. எனினும், மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று பாதிப்பு  24 ஆயிரத்து 383- ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. 

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தரவுகளின் படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,718- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பு விகிதம் 30.64-சதவிகிதமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் இன்று கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியிருந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையும் நேற்றை விட இன்று சற்று சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story